பாலக்காடு:சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு, 7:30 மணிக்கு கேரள மாநிலம் கோழிக்கோட்டிற்கு சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பஸ், நேற்று காலை 8:00 மணிக்கு, பாலக்காடு ஸ்ரீகிருஷ்ணபுரம் திருவாழியோடு அருகே வந்தது.
அப்போது, எதிரில் வந்த வாகனத்திற்கு வழி விட திருப்பிய போது கட்டுப்பாடு இழந்து ரோட்டோர மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்தது. இதில், மலப்புரம் மாவட்டம், பொன்னானியை சேர்ந்த சைனபா பீவி, 39, கோழிக்கோடு மாவட்டம் குற்றியாடியை சேர்ந்த முகமத் இஷான், 18, ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
விபத்தில், 19 பேர் காயமடைந்தனர். விபத்தால், இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement