Realme 11 5G : 108MP கேமரா, 67W SUPERVOOC சார்ஜிங் என அதிரடி சிறப்பம்சங்களுடன் வெளியாகியுள்ள ரியல்மி 11 5ஜி!

ரியல்மீயின் அடுத்த தயாரிப்பான Realme 11 5G மற்றொன்று Realme 11X 5G ஆகியவை சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் முக்கியமான Realme 11 5G மொபைல் அதிநவீன பேட்டரி, ப்ராசஸர் மற்றும் கேமரா வசதிகளோடு வெளியாகியுள்ளது. அதன் சிறப்பம்சங்கள் என்ன? புதிதாக அப்டேட் செய்யப்பட்டுள்ள டெக்னாலஜிகல் என்னென்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

​Realme 11 5G ப்ராசஸர் மற்றும் ஸ்டோரேஜ்Realme 11 5G மாடலில் octa-core Dimensity 6100+ 5G சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், 8GB+128GB மற்றும் 8GB+256GB ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனையாக உள்ளது. இந்த மாடல் ஆன்ட்ராய்டு 13 realme UI 4.0 அடிப்படையில் இயங்குகிறது.
​Realme 11 5G டிஸ்பிளே மற்றும் நிறம்Realme 11 5G மொபைலில் டைனமிக் அல்ட்ரா ஸ்மூத் டிஸ்பிளே பொறுத்தப்பட்டுள்ளது. 1080*2400 ரெசல்யூஷனில் 6.72இன்ச் FHD+ டிஸ்பிளே மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வசதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் குளோரி கோல்டு மற்றும் குளோரி ப்ளாக் நிறங்களில் மொபைல் விற்பனைக்கு வந்துள்ளது.
​கேமரா வசதிகள்Realme 11 5G மொபைலில் 3x zoom கேமராவுடன் கூடிய 108 மெகாபிக்ஸல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. 2 மெகாபிக்ஸல் போர்ட்ரைட் கேமராவும் பின்புறம் வழங்கப்பட்டுள்ளது. அதே போல், முன்புறம் சிறந்த வீடியோ கால் அனுபவம் மற்றும் செல்ஃபீ போட்டோக்களை எடுப்பதற்காக 16 மெகாபிக்ஸல் செல்ஃபீ கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.
​Realme 11 5G பேட்டரிRealme 11 5G மொபைலில் 5000 mAh திறன்மிக்க பேட்டரி மற்றும் 67W SUPERVOOC வேகமான சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. USB Type-C Port வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மூலம் 17 நிமிடத்தில் 50 சதவீதம் சார்ஜ் ஏறும் வசதி உள்ளது.
​Realme 11 5G – ன் விலைஇந்தியாவில் Realme 11 5G – ன் 8GB+128GB வேரியண்ட் 18,999 ரூபாய்க்கும், 8GB+256GB வேரியண்ட் 19,999 ரூபாய்க்கும் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும், தொடக்க கால சலுகைகளாக வங்கி சலுகைகள், கூப்பன்கள் மற்றும் 18 மாத வாரண்ட்டி ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளது. முன்பதிவு நேற்று (23.8.2023) தொடங்கி 28ம் தேதி வரை நடைபெறுகிறது. ஆகஸ்ட் 29 முதல் realme.com மற்றும் பிளிப்கார்ட் தளம் வாயிலாக விற்பனைக்கு வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.