சென்னை: நாகை, திருவாரூர் மாவட்டத்தில் 4 நாள் அரசுமுறை பயணம் மேற்கொள்ளும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முற்பகல் விமானம் மூலம் திருச்சிக்கு புறப்பட்டார். இன்று தருமபுர ஆதினம் கலைக்கல்லூரி விழாவில் கலந்துகொள்கிறார். திருச்சி சென்ற முதலமைச்சருக்கு திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர் நேரு தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கார் மூலம் கும்பகோணம் சென்று ஓய்வெடுக்கும் முதல்வர் ஸ்டாலின், மாலை திருவாரூர் செல்கிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொளகிறார். சென்னையில் திருச்சி செல்லும் முதல்வர், […]
