கடந்த வாரம் டெக்னா நிறுவனம் தனது Pova 5 மற்றும் Pova 5 Pro ஆகிய மொபைல்கள் இந்தியாவில் வெளியிட்டுள்ளது. குறைந்த விலையில் வெவ்வேறு வேரியண்ட்டுகள், அதிநவீன பேட்டரி மற்றும் கேமரா பொறுத்தப்பட்டு வெளியாகியுள்ளது இந்த மொபைல். அதன் முழு விவரங்கள் குறித்து பார்க்கலாம்.
Tecno Pova 5 டிஸ்பிளேTecno Pova 5 மொபைலில் 6.78″ FHD+ Display டிஸ்பிளே மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் ஆகியவையும், Tecno Pova 5 Pro மாடலில் 6.78″ FHD+ Dot-in டிஸ்பிளே மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் ஆகியவையும் பொறுத்தப்பட்டுள்ளது.
கேமராTecno Pova 5 – ன் கேமராவை பொறுத்தவரை 50 மெகாபிக்ஸல் டூயல் ரியர் கேமரா, 8 மெகாபிக்ஸல் முன்பக்க கேமரா ஆகியவையும், Tecno Pova 5 Pro மாடலில் 50 மெகாபிக்ஸல் டூயல் ரியர் கேமரா, 16 மெகாபிக்ஸல் செல்ஃபீ கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.
ப்ராசஸர்Tecno Pova 5 – ல் Helio G99 6nm பொறுத்தப்பட்டுள்ளது. இதே, Tecno Pova 5 Pro மாடலில் MediaTek Dimensity 6080 ப்ராசஸர் பொறுத்தப்பட்டுள்ளது. இரண்டு மொபைல்களுமே HiOS based on Android™ 13 அடிப்படையில் தான் இயங்குகின்றன.
பேட்டரி மற்றும் ஸ்டோரேஜ்Tecno Pova 5 – ல் 6000mAh திறன்மிக்க பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதே, Tecno Pova 5 Pro மாடலில் 5000mAh திறன்மிக்க பேட்டரி மற்றும் 68W அல்ட்ரா சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. ஸ்டோரேஜை பொறுத்தவரை 8GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது.
நிறங்கள் மற்றும் விலைTecno Pova 5 Amber Gold , Mecha Black , Hurricane Blue ஆகிய மூன்று நிறங்களிலும், Tecno Pova 5 Pro Dark Illusion மற்றும் Silver Fantasy ஆகிய இரண்டு நிறங்களிலும் வெளியாகியுள்ளது. விலையை பொறுத்தவரை Tecno Pova 5 மொபைல் 11,999 ரூபாய் தொடக்க விலையிலும், Tecno Pova 5 Pro 14,999 ரூபாய் தொடக்க விலையிலும் விற்பனை ஆகி வருகிறது.