வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெங்களூரு: நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டரில் இருந்து ரோவர் தரையிறங்கி ஆய்வு செய்த வீடியோவை இஸ்ரோ வெளியிட்டு உள்ளது.
நிலவை ஆய்வு செய்வதற்காக, இஸ்ரோ சார்பில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, ஜூலை 14ல் சந்திரயான் – 3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. 41 நாட்கள் பயணத்துக்குப் பின், சந்திரயான் விண்கலம் நேற்று மாலை 6:04 மணிக்கு நிலவில் கால் பதித்தது. விண்கலத்துடன் அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர், நிலவில் நிலைநிறுத்தப்பட்டது.
அப்போது, பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு அறையில் இருந்த விஞ்ஞானிகள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர். இதற்காக இஸ்ரோவுக்கு, ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள், நாட்டு மக்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நேற்று, லேண்டரில் இருந்து வெளியே வந்த பிரக்யான் ரோவர் தனது ஆய்வு பணிகளை துவக்கி உள்ளது.
இந்நிலையில், விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் தரையிறங்கி ஆய்வு செய்யும் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement