ரூ.271 கோடியில் பெங்களூரு சொகுசு பங்களா திட்டம்… இன்னும் ரெண்டே மாதத்தில் ரெடியாகும் 322 வில்லாக்கள்!

பெங்களூரு மாநகரம். இந்தியாவின் மூன்றாவது அதிக மக்கள்தொகை கொண்ட நகரம். சர்வதேச அளவில் எடுத்துக் கொண்டால் 27வது பெரிய நகரம். இங்கு ஐடி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வளர்ச்சி மிக வேகமாக சென்று கொண்டிருக்கிறது. பெங்களூருவை நோக்கி இடம்பெயரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் நகரம் படிப்படையாக விரிவடைந்த வண்ணம் உள்ளது.

பெங்களூரு மேம்பாட்டு ஆணையம்இதற்கேற்ப மெட்ரோ ரயில் வழித்தடங்கள், சாலை, மேம்பால வசதிகள், புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் என உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. பெங்களூரு நகரை சர்வதேச அளவில் உயர்தர கட்டமைப்புகள் உடன் மாற்றும் வகையில் கர்நாடகா அரசால் ஏற்படுத்தப்பட்டது பெங்களூரு மேம்பாட்டு ஆணையம் (Bangalore Development Authority). இது மாநில அரசின் நகர்ப்புற மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது.​சொகுசு வில்லா திட்டம்இதன்மூலம் பெங்களூரு நகரின் நிலையான வளர்ச்சிக்கு திட்டமிடல், ஒழுங்குபடுத்துதல், கட்டுப்படுத்துதல், கண்காணித்தல், வசதிகளை ஏற்படுத்தி தருதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெங்களூரு மேம்பாட்டு ஆணையம் மூலம் கடந்த 2018ஆம் ஆண்டு திட்டம் ஒன்று வகுக்கப்பட்டது. அதாவது, நவீன வசதிகளுடன் கூடிய வில்லாக்களை கட்டுவது. இதற்காக 31 ஏக்கர் நிலத்தை தேர்வு செய்து 271 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
​ஆன்லைன் மூலம் விண்ணப்பம்மொத்தம் 322 சொகுசு வில்லாக்களை (Villas) கட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இவை முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் அரசு விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. விருப்பமுள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட வில்லாக்களில் 4 BHK மொத்தம் 170 ஆகும். இதன் விலை 1.1 கோடி ரூபாய்.
​விலை 10 சதவீதம் வரை உயர்வுஅதுவே 3 BHK வில்லாக்களின் எண்ணிக்கை 152. இதன் விலை 75 லட்ச ரூபாய். இது தற்போதைய நிலவரம் தான். இன்னும் சில கடைசிகட்ட பணிகள் இருக்கின்றன. அவை முடிந்து அடுத்த இரண்டு மாதங்களில் விற்பனைக்கு வந்துவிடும். அப்போது விலை சற்றே அதிகமாக இருக்கும். அதாவது 10 சதவீதம் வரை அதிகரிக்கலாம் எனக் கூறப்படுகிறது.
ஸ்பெஷல் 1 BHK பிளாட்கள்இந்த வில்லாக்களை விலைக்கு வாங்குவோர் தங்கள் வேலையாட்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் தங்குவதற்கு 1 BHK பிளாட்களை வாங்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக 320 பிளாட்கள் ரெடியாகவுள்ளன. இதன் விலை 14 லட்ச ரூபாய். இந்த வில்லாக்கள் இடம்பெற்றுள்ள பகுதியிலேயே 44 ஆயிரம் சதுர அடியில் நவீன வசதிகள் உடன் கூடிய கிளப் ஹவுஸ் அமைந்துள்ளது.
என்னென்ன வசதிகள்?மேலும் 5 லட்சம் சதுர அடியில் பூங்கா, கூடைப்பந்து மைதானம், கிரிக்கெட் மைதானம், குழந்தைகள் விளையாடும் மைதானம் உள்ளிட்டவை அமைந்துள்ளன. ”புனீத் ராஜ்குமார் ஹவுசிங் காம்ப்ளக்ஸ்” என்ற பெயரில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் இந்த வில்லாக்கள், பெங்களூரு நகரின் வடக்கே தாசனபுரா அருகே ஹுன்னிகெரே கிராமத்தில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.