சென்னை: தமிழகம் முழுவதும் காவல்துறையில் 750 உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்துத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்வர்கள் பலத்த சோதனைக்கு பின் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். பிற்பகல் மொழித்தேர்வு நடைபெறுகிறது. முன்னதாக கடந்த ஜூன் மாதம் தமிழ்நாடு காவல்துறையில் நிரப்பப்பட உள்ள 750 காவல் துணை ஆய்வாளர் பதவி காலியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (டிஎன்யுஎஸ்ஆர்பி) வெளியிட்டது. அதன்படி, 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, மொத்த காலியிடங்கள்: 750 […]
