18 வருடங்களாக பேச முடியாத பெண்ணை பேச வைத்த AI டெக்னாலஜி! அறிவியல் நிகழ்த்திய அதிசயம்!

நாளுக்கு நாள் வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகில் நடப்பதெல்லாம் மேஜிக் தான் என்பது போல புதிய புதிய கண்டுபிடிப்புகள் அறிமுகமாகி நம்மை அதிர வைக்கின்றன. அப்படி அமெரிக்க கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்தை சேர்ந்த அறிவியலாளர் குழு ஒன்று 18 வருடங்களாக உறுப்புகள் செயலிழந்து பேச முடியாமல் இருக்கும் பெண்ணை AI தொழில்நுட்பம் கொண்டு பேச வைத்திருக்கும் சம்பவம் டெக் உலகில் புதிய பரிணாமத்தை தொடங்கி வைத்துள்ளது.

AI மூலம் பேச்சாற்றல்

டெக் உலகில் முதன்முறையாக பல்வேறு நரம்பியல் பிரச்சனைகளினால் மூளை பாதிக்கப்பட்டு பேச முடியாமல் போனவர்களின் மூளை அனுப்பும் சிக்னல்களை வாங்கி AI டெக்னாலஜியின் அவதார் மூலம் பேச வைத்து சாதனை படைத்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். ப்ரைன்ஸ்டெம் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டு கடந்த 18 வருடங்களாக உறுப்புகள் முடங்கி பேச முடியாமல் அவதிப்பட்டு வரும் 47 வயதான ஆன் (aan) என்ற பெண் மூலமாகவே இந்த சாதனையை படைத்துள்ளனர்.

UCSF குழுவினர் சாதனை

கைலோ லிட்டில்ஜான் மற்றும் UCSF-ல் உள்ள அவரது குழுவினர் இணைந்து இந்த சாதனையை படைத்துள்ளனர். கைலோவின் குழுவினர் ஆனின் மூளைக்குள் எலெக்ட்ராடுகளை பதித்து அவரது சிந்தனைகளை AI அவதார் மூலம் பேச்சாக வடிவமைத்துள்ளனர். இதற்காக பல வாரங்கள் இந்த AI டெக்னாலஜி ஆனின் மூளை சிக்னல்கள் குறித்து ஆராய்வதற்காக பல்வேறு பயிற்சிகளையும் மேற்கொண்டு ஆய்வாளர்களுடன் ஒத்துழைத்ததன் விளைவு தற்போது மீண்டும் மற்றவர்களுடன் தன்னுடைய பேச்சு மூலம் தொடர்பு கொள்ளும் நிலையை அடைந்துள்ளார் ஆன். கடந்த 18 வருடங்களில் முதல்முறையாக தன்னுடைய சொந்த குரலை AI வழியாக கேட்டுள்ளார் ஆன்.

எப்படி செயல்படுகிறது?

ஆனின் மூளை அனுப்பும் சிக்னல்களை முழு வார்த்தைகளாக எடுத்துக்கொள்ளாமல் சிறு சிறு ஒலிக்குறிப்புகளாக பிரித்து புரிந்து கொண்டு துல்லியம் மற்றும் வேகமாக இயல்பான உரையாடல் போலவே AI டெக்னாலஜியின் மூலம் அவதார் வழியாக இது சாத்தியமாயிற்று. ஆனாவின் இந்த தொழில்நுட்ப சாதனை மூலம் மேலும் அதுசார்ந்த பல்வேறு ஆய்வுகளின் மீது கவனம் திரும்பியுள்ளது. குறிப்பாக முடங்கி கிடக்கும் மக்களுக்கு தொழில்நுட்பம் மூலம் வளர்ச்சியை அளிப்பது, மூளை சிக்னல்கள் மூலம் பாடல்களை கண்டுபிடிப்பது, முக்கியமான தகவல்களை கண்டுபிடிப்பது போன்ற ஆய்வுகளின் மீது தற்போது வெளிச்சம் பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.