ஜோ பைடனின் கான்வாய் வாகன டிரைவரால் பரபரப்பு| Joe Bidens convoy chauffeured by the driver

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் கான்வாய் வாகன டிரைவர் செயலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து கான்வாயில் இருந்து அந்த வாகனம் அப்புறப்படுத்தப்பட்டது.

புதுடில்லியில் 10 மற்றும் 11ம் தேதிகளில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள உலகம் முழுவதும் இருந்து பல்வேறு நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டனர். உலக தலைவர்களின் வருகையையொட்டி அவர்களின் பாதுகாப்பை கருதி டில்லி நகரங்களில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது.

அதே நேரத்தில் உலக தலைவர்கள் தங்குவதற்காக புகழ்பெற்ற ஓட்டல்களில் அறை முன்பதிவு செய்யப்பட்டு இருந்தது. டில்லியின் மவுரியா ஓட்டலில் அமெரிக்க அதிபர் மற்றும் அவருடன் வந்தவர்கள் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். அதே போல் தாஜ் ஓட்டலில் ஐக்கிய அரபு எமிரேட்சின் பட்டத்து இளவரசர் தங்கி இருந்தார்.

அமெரிக்க அதிபர் தங்கி இருந்த ஓட்டலில் இருந்து மாநாடு நடைபெறும் இடத்திற்கு செல்வதற்காக கார்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. டிரைவர்களுக்கு காலை 9.30 மணிக்கு ஓட்டலில் ஆஜராக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே காலை 8 மணி அளவில் அமெரிக்க அதிபருக்கான கான்வாயில் செல்லக்கூடிய கார் ஒன்று தாஜ் ஓட்டலுக்கு செல்வதை கண்டு பாதுகாப்பு அதிகாரிகள் பரபரப்பு அடைந்தனர். அந்த காரில் தொழில்அதிபர் பயணித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து காரில் பயணித்தவர்கள் மற்றும் டிரவைர் ஆகியோர் பாதுகாப்பு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

தொடர்ந்த நடத்தப்பட்ட விசாரணையில்கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து தனக்குத் தெரியாது என்று டிரைவர் கூறினார். இதனையடுத்து அமெரிக்க ஜனாதிபதியின் கான்வாயில் இருந்து வாகனமும் அகற்றப்பட்டது.

10 ம் தேதி ஜனாதிபதி பைடன் மகாத்மா காந்தியின் ராஜ்காட் நினைவிடத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட பிறகு வியட்நாம் சென்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.