
லியோ – விஜய், லோகேஷ் கனகராஜ் மோதலா ?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. அடுத்த மாதம் இப்படம் வெளியாக உள்ளது. இதனிடையே, இப்படம் குறித்து திடீரென சில வதந்திகளும், சர்ச்சைகளும் பரவி வருகிறது.
பட உருவாக்கத்தில் விஜய்க்கும், இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கும் இடையே மோதல் என சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். கதைப்படி இல்லாத சில காட்சிகளை விஜய் சேர்க்கச் சொன்னதாகவும், அப்படியெல்லாம் சேர்க்க மாட்டேன் என லோகேஷ் சொன்னதாகவும் அதனால் இருவருக்கும் மோதல் என்கிறார்கள். அதனால், படத்தை லோகேஷின் நண்பரும் இயக்குனருமான ரத்னகுமார் தான் பெரும்பாலும் இயக்கியதாகச் சொல்கிறார்கள்.
மேலும், லோகேஷ் கனகராஜின் டுவிட்டர் 'பயோ'வில் அவர் இயக்கிய “மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம்” ஆகிய படங்களை மட்டுமே சேர்த்திருக்கிறார் என்றும் அதில் 'லியோ' காணவில்லை என்பதும் பரபரப்பாகி வருகிறது. அவர் 'லியோ' பெயரை இன்னும் சேர்க்கவில்லையா, அல்லது சேர்த்துவிட்டு நீக்கிவிட்டாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இருப்பினும் 'லியோ' படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளதால் எதிரிகள் இப்படியான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள் என விஜய் ரசிகர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.