டெல்லி: 2014க்கு பிறகு 52%டீசல் வாகனங்கள் 18% ஆக குறைந்துள்ளது என கூறிய மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி, டீசல் வாகனங்கள் மீது 10 சதவிகிதம் மாசு வரி விதிக்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளார். அதிகரித்து வரும் மாசை கட்டுப்படுத்தும் வகையில், டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்களை குறைக்க அறிவுறுத்தி உள்ள இந்திய அரசு, மாசு உருவாக்கும் டீசல் வாகங்களுக்கு மாசு வரி விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளதுடன், மின்வாகனங்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை அதிகரித்துள்ளது. […]
