கேரளாவுக்கு 1.06 கோடி சுற்றுலா பயணிகள் வருகை ஜன., முதல் ஜூன் வரை | 1.06 crore tourist arrivals in Kerala from Jan to June

மூணாறு:கடவுளின் சொந்த நாடாக கருதப்படும் கேரளாவில் 2023 ஜன., முதல் ஜூன் வரை 1.06 கோடி சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.

இம்மாநிலத்தில் உலக அளவில் பிரசித்தி பெற்ற சுற்றுலா பகுதிகள் அதிகம் உள்ளன. இம்மாநிலத்திற்கு கடந்த ஆறு மாதங்களில் உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்ததாக தெரியவந்தது. அந்த கால கட்டத்தில் 1,06,83,643 உள்நாட்டு பயணிகள் வருகை தந்தனர். இதே காலகட்டத்தில் 2022ல் 88,95,593 பயணிகள் வந்துள்ளனர். கடந்தாண்டை விட இந்தாண்டு பயணிகளின் எண்ணிக்கை 20.1 சதவீதம் அதிகம். 2019ல் முதல் ஆறு மாதங்களில் 89.64 லட்சம் பயணிகள் வந்தனர்.

இந்தாண்டு முதல் ஆறு மாதங்களில் உள்நாட்டு பயணிகள் 22,16,250 பேர் வருகை தந்து எர்ணாகுளம் மாவட்டம் முதலிடமும், 18,01,502 பயணிகள் வருகை தந்து இடுக்கி மாவட்டம் இரண்டாம் இடத்தையும் பெற்றன.

வெளிநாட்டு பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது. 2022ல் முதல் ஆறு மாதங்களை கணக்கிடுகையில் 171.55 சதவீதம் பயணிகள் வருகை கூடுதல் என தெரிய வந்தது. அந்த காலகட்டத்தில் 2022ல் 1, 05, 960 பயணிகள் வருகை தந்த நிலையில் அந்த எண்ணிக்கை 2023ல் 2,87,730 ஆக அதிகரித்தது. கடந்தாண்டை விட 1,81,770 பயணிகள் அதிகம் வந்துள்ளனர்.

வருவாய் அதிகரிப்பு

பயணிகளின் வருகையால் வருவாயும் உயர்ந்தது. 2022ல் ரூ.35,168.42 கோடி வருவாய் கிடைத்தது. 2020ல் ரூ.11,335.96 கோடியும், 2021ல் ரூ.12,285.42 கோடியும் வருவாய் கிடைத்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.