சென்னை வரும் 2024 ஆம் வருடத்துக்கான பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கட் முன்பதிவு இன்று தொடங்குகிறது. ஆண்டு தோறும் தீபாவளி ,பொங்கல் பண்டிகை காலங்களில் பொதுமக்களின் வசதிக்காக 120 நாட்களுக்கு முன்பாகவே ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கும். வரும் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி போகி பண்டிகை தொடங்கி, ஜனவரி 15-ம் தேதி பொங்கல், 16-ம் தேதி மாட்டுப்பொங்கல் 17-ஆம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இன்று, பொங்கல் பண்டிகையையொட்டி ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது. […]
