ஆப்பிரிக்க நாட்டில் 46 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: பதிலடி தாக்குதலில் 10 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

பமாகோ,

ஆப்பிரிக்க நாடான மாலியில் கடந்த 2020-ம் ஆண்டு மக்களாட்சி கவிழ்க்கப்பட்டது. அதன் பின் அமைந்த ராணுவ ஆட்சியில் ஜ.எஸ்., அல்கொய்தா உள்ளிட்ட பயங்கரவாதிகள் அதிக அளவில் தலைதூக்க ஆரம்பித்தனர். நாட்டின் சாகல் மாகாணத்தை அடிப்படையாக கொண்டு இயங்கி வரும் பயங்கரவாதிகளை ஓழித்துக்கட்ட ராணுவத்தினர் கடுமையாக முயற்சித்து வருகிறார்கள். இதனால் அவ்வப்போது இருதரப்புக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படும்.

இந்தநிலையில் கவோ பகுதியின் போரெம் நகரில் ராணுவ வீரர்கள் கவச வாகனங்களில் வழக்கமான ரோந்துப்பணி மேற்கொண்டனர். அப்போது பயங்கரவாதிகள் கூட்டம் வெடிகுண்டுகள் பொருத்திய வாகனங்களில் வந்தனர். ராணுவ வீரர்களின் வாகன அணிவகுப்பிற்குள் திடீரென புகுந்து தற்கொலை தாக்குதலில் ஈடுபட்டனர். சுதாரித்து கொண்ட ராணுவத்தினர் பயங்கரவாதிகள் மீது துப்பாக்கிச்சண்டை நடத்தினர். இதில் 46 பயங்கரவாதிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக ராணுவ உயர் அதிகாரிகள் கூறுகிறார்கள். இந்த தாக்குதலில் துரதிர்ஷ்டவசமாக 10 ராணுவ வீரர்கள் இறந்தனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.