சிங்கப்பூர்,சிங்கப்பூரின் ஒன்பதாவது அதிபராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்தினம், 66, நேற்று பதவி ஏற்றுக்கொண்டார்.
தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் சமீபத்தில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்தது.
இதில், இந்திய வம்சாவளியும், தமிழருமான தர்மன் சண்முகரத்னம், 70 சதவீதத்திற்கும் அதிகமான ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட சீன வம்சாவளிகளான இங் கொக் செங், 76, டான் கின் லியான், 75, ஆகியோர் முறையே, 15.7 சதவீதமும், 13.88 சதவீதமும் ஓட்டுகளை பெற்றனர்.
இந்நிலையில், ஏற்கனவே அதிபராக இருந்த ஹாலிமாவின் ஆறு ஆண்டு பதவிக்காலம் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதையடுத்து சிங்கப்பூரின் ஒன்பதாவது அதிபராக தர்மன் சண்முகரத்தினம், நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement