மாட்ரிட், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஸ்பெயின் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், வழக்கமாக அணியும் புடவையில், ‘ஜாகிங்’ பயிற்சியில் ஈடுபட்டார்.
மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி, முதலீடுகளை ஈர்ப்பதற்காக, மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய், ஐரோப்பிய நாடான ஸ்பெயினுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.
இந்நிலையில் ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் சென்ற அவர், நேற்று காலை அங்கு, ஜாகிங் பயிற்சி மேற்கொண்டார். வழக்கமாக அணியும் புடவை மற்றும் காலணிகளுடன் ‘ஸ்மார்ட் வாட்ச்’ அணிந்து இந்த பயிற்சியில் ஈடுபட்டார்.
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்டதுடன், ‘புத்துணர்ச்சியான காலைப் பொழுதில், ஜாகிங் போன்ற உடற்பயிற்சி மேற்கொண்டால், நாள் முழுதும் உற்சாகமாக பணிபுரிய முடியும்.
அனைவரும் ஆரோக்கியமாக இருங்கள்’ என, அதில் குறிப்பிட்டு உள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement