வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கொழும்பு : விளையாட்டில் பெற்ற பரிசு தொகையை மைதான ஊழியர்களுக்கு வழங்கி மற்றொரு சாதனையை படைத்தார் கிரிக்கெட் வீரர் முகம்மது சிராஜ்
இந்தியா இலங்கை இடையே ஆசிய கோப்பை சாம்பியன் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. கோப்பையை வெல்லப்போவது யார் என்ற போட்டியில் இந்திய வீரர் முகமது சிராஜ் அதிரடி காட்டி ஒரே ஓவரில் 4 விக்கெட் உட்பட 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டார். இதனையடுத்து இந்தியா எட்டாவது முறையாக ஆசியகோப்பை சாம்பியன் ஆனது.
இதனையடுத்து ஆட்ட நாயகன் பரிசுதொகை அறிவிக்கப்பட்டது. இதில் சிராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு 50 ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசு தொகை அறிவிக்கப்பட்டது. இது இலங்கையின் மதிப்பில் சுமார் ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் சமமாகும்.
இறுதிப் போட்டியில் முகமது சிராஜ் இந்தியர்களின் இதயங்களை மட்டுமல்லாது உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் இதயங்களையும் வென்றார். பரிசு பெற்ற சிராஜ் அதை கிரிக்கெட் மைதான ஊழியர்களுக்கு வழங்குவதாக தடலாடியாக அறிவித்தார்.
சிராஜ் கூறுகையில், நான் இந்த ரொக்கப் பரிசை மைதான வீரர்களுக்கு வழங்க விரும்புகிறேன். அவர்கள் அதற்கு தகுதியானவர்கள். அவர்கள் அருகில் இல்லை என்றால், இந்த போட்டி வெற்றி பெற்றிருக்காது,” என்றார்.
சிராஜின் செயல் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் பாராட்டப்பட்டது.
ஒன்பது போட்டியை நடத்திய இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு வானிலை நிலைமை ஒரு சவாலாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement