`கலைஞர் 100… விகடனும் கலைஞரும்’ நூல் வெளியீட்டு விழா!
கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு கொண்டாடப்படும் வேளையில், விகடனுடன் அவருக்கு இருந்த உறவு எப்படிப்பட்டது என்பதை விளக்கும்விதமாக, ஆனந்த விகடன், ஜூனியர் விகடன் மற்றும் விகடன் குழும இதழ்களில் வெளியான கலைஞர் கருணாநிதி தொடர்பான செய்திகள், அவர் அளித்த பேட்டிகள் அனைத்தும் காலவரிசைப்படி `கலைஞர் 100… விகடனும் கலைஞரும்’ என்ற நூலில் சரமாகத் தொடுக்கப்பட்டிருக்கிறது.
`கலைஞர் 100… விகடனும் கலைஞரும்’ நூலின் வெளியீட்டு விழா, இன்று (20.09.2023) சென்னை கலைவாணர் அரங்கத்தில் மிக விமர்சையாக நடைபெறவிருக்கிறது. விகடன் பிரசுரத்தின் இந்த நூலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட, உலக நாயகன் கமல்ஹாசன் பெற்றுக்கொள்கிறார்.
`கலைஞர் 100… விகடனும் கலைஞரும்’ நூலை வாங்குவதற்கு, இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும் ——>>> https://bit.ly/3Zpcc0r

அதைத் தொடர்ந்து, விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசனின் வரவேற்புரையும், தி இந்து குழுமத்தின் இயக்குநர் என்.ராம், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் மனோஜ்குமார் சொந்தாலியா, தினத்தந்தி இயக்குநர் பாலசுப்பிரமணியன் ஆதித்தன், தினமலரின் வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பப் பிரிவு இயக்குநர் எல்.ஆதிமூலம் ஆகியோர் வாழ்த்துரையும் வழங்குகின்றனர். இறுதியாக ஆனந்த விகடன் ஆசிரியர் தி.முருகன் நன்றியுரை வழங்குகிறார்.
இன்று மாலை 5:30 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவிருக்கும் இந்த நூல் வெளியீட்டு விழாவுக்கு அனுமதி இலவசம்… அனைவரும் வாரீர்!





