l ஹூப்பள்ளி – ராமேஸ்வரம் இடையே, வாரந்தோறும் சனிக்கிழமை எக்ஸ்பிரஸ் ரயில், எண்: 07355 இயக்கப்படுகிறது. இந்த ரயில் சேவை வரும் 30ம் தேதியுடன் நிறுத்தப்பட இருந்தது. தற்போது, அடுத்த மாதம் 7ம் தேதி முதல் டிசம்பர் 30ம் தேதி வரை, சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் – ஹூப்பள்ளி இடையில் ஞாயிறு மட்டும் இயங்கும், ரயில் எண்: 07356 சேவையும் அடுத்த மாதம் 8ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
l விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, தாவணகெரே டவுனில் வைக்கப்பட்டு இருந்த, விநாயகர் சிலைகளை கரைக்க, டிராக்டர்களில் நேற்று ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன. இதில் ஒரு டிராக்டரை, கர்நாடகா தோட்டக்கலைத் துறை அமைச்சர் மல்லிகார்ஜுன் ஓட்டி சென்றார்.
l பா.ஜ.,வுடன் ம.ஜ.த., கூட்டணி வைத்தது, அக்கட்சி தலைவர்களுக்கே பிடிக்கவில்லை. இந்நிலையில் ம.ஜ.த., கட்சியின் மாநில துணை தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான ஷபி அகமது நேற்று, துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். கட்சியின் முதன்மை உறுப்பினர், பதவியில் இருந்தும் விலகி உள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement