கூகுள் ஆண்டவரின் 25ஆவது பிறந்தநாள்… பலருக்கும் தெரியாத சில சுவாரஸ்ய தகவல்கள் இதோ!

Google 25th Birthday: கூகுள் நிறுவனம் தனது 25ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுவது நீங்கள் நிச்சயம் தெரிந்திருப்பீர்கள். ஒரு நிறுவனம் கால் நூற்றாண்டு காலம் நிலைத்திருப்பது சாதரண விஷயம் இல்லை என்றாலும், உலகத்தில் பெரும் செல்வாக்கு நிறைந்த நிறுவனமாக பல ஆண்டுகளாக நிலைத்து நிற்பது என்பது யோசிக்கக் கூடாது இயலாத விஷயமாக உள்ளது.

சில சுவாரஸ்ய தகவல்கள்

உங்களின் அன்றாட வாழ்வின் அத்தனை பொழுதுகளிலும் உங்களின் உற்றத் துணையாக, உதவியாளனாக கூடவே இருப்பவர் தானே, இந்த கூகுள் ஆண்டவர், உங்களின் தொடர்பு எண்கள், உங்கள் நினைவுகள், புகைப்படங்கள், வீடியோக்கள், ரகசிய தகவல்கள் (?!) என அனைத்தையும் கொடுத்து வைக்கும் நண்பானகாவும் அது இருக்கிறது.

எப்போதும் உங்கள் தேடலுக்கு கோடிக்கணக்கான பதில்களை அளிக்கும் கூகுளை பற்றி எப்போதாவது தெரிந்துகொள்ள வேண்டும் என நினைத்திருக்கிறீர்களா… கூகுள் குறித்த அத்தனை விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் ஒரு பெரிய புத்தகமே போடலாம், அந்த அளவிற்கு உலக பொருளாதாரத்திலும், நம் அன்றாட வாழ்விலும் செலுத்திய தாக்கம் அளவிட இயலாதது. இருப்பினும், கூகுள் நிறுவனம் பற்றிய தேர்ந்தெடுக்கப்பட்ட சில் சுவாரஸ்ய தகவல்களை இங்கு காணலாம்.  zeenews.india.com/tamil/technology/googles-new-feature-instant-dark-web-scan-and-personal-data-protection-for-indian-users-460932

கூகுளின் சூர்யவம்ச சின்னராசு கதை

ஆம், இதுவும் சூர்யவம்சம் சின்னராசு கதை போன்று தான். மூட்டைத் தூக்கி சம்பாதித்து ஒரே பாட்டில் பணக்காரர் ஆகும் அதே கதை தான் கூகுளும். கூகுளின் முதல் அலுவலகம் வாடகைக்கு எடுக்கப்பட்ட ஒரு சின்ன இடம் தான் (Garage). 1998ஆம் ஆண்டில் இதே செப்டம்பர் 27ஆம் தேதியில், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள மென்லோ பூங்காவில் உள்ள சூசன் வோஜ்சிக்கியின் கேரேஜில் இருந்து கூகுள் நிறுவனம் இயங்கத் தொடங்கியது.  

இப்போது யூ-ட்யூப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ள வோஜ்சிக்கி கூகுளின் முதல் சந்தைப்படுத்தல் மேலாளராக இருந்தார். கேரேஜை ஒரு கட்டத்தில் கூகுள் நிறுவனம் வாங்கியது. இப்போது அந்த இடத்தை முழுமையாக மாற்றி, கூகுள் நிறுவனத்தின் வரலாற்றில் ஒரு முக்கிய இடமாக அதை பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறது.

கூகுளின் இயற்பெயர் என்ன தெரியுமா?

கூகுள் ஆண்டவருக்கு முதலில் கூகுள் என்ற பெயரே கிடையாது. அது முதலில் ‘பேக் ரப்’ (Back Rub) என்றே அழைக்கப்பட்டது. கூகுள் நிறுவியவர்களான லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகியோர் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தபோது, அவர்களின் இந்த பிராஜக்டை ‘பேக் ரப்’ என பெயரிட்டுள்ளனர். அதாவது, பல இணைப்புகளை பகுப்பாய்வு செய்வதை நோக்கமாக இந்த இணையதளம் கொண்டுவரப்பட்டதால் இப்படி அதற்கு பெயர் சூட்டியிருக்கின்றனர். அதன்பின்னர் தனித்துவமான பெயரா இருக்க வேண்டும் என்பதற்காக கூகுள் என பெயர் மாற்றினர்.

வினைச்சொல்லாக நிலைத்துவிட்ட கூகுள்

கூகுளின் தாக்கம் நம் வாழ்வில் மிகவும் ஆழமானது என முன்னரே சொன்னோம் அல்லவா, அதற்கான உதாரணத்தை இங்கு காணலாம். கூகுள் தற்போது ஒரு வினைச்சொல்லாக மாறிவிட்டது. 2006ஆம் ஆண்டில், ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி மற்றும் மெரியம்-வெப்ஸ்டர் கல்லூரி அகராதி ஆகியவை “google” என்ற ஆங்கில வார்த்தையை ஒரு வினைச்சொல்லாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தன. “googling” என்பது இப்போது இணையத்தில் தேடுவதற்கான சொல்லாக மாறிவிட்டது. இது கூகுள் நமது அன்றாடத்தில் எவ்வளவு ஆழமாக பிணைக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது.

உலகமே ஸ்தம்பித்த அன்று ஒரு நாள்

கூகுள் வேலை செய்யாமல் போனது மிக மிக குறைவே. ஆனால் அது ஒரு முறை வேலை செய்யாமல் போன போது, உலகமே ஸ்தம்பித்துவிட்டது என்று சொன்னால் நம்ப முடிகிறதா?. 2013ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 16ஆம் தேதி அன்று ஒரு ஐந்தே நிமிடம் வரை அனைத்து கூகுள் சேவைகளும் வேலை செய்யாமல் முடங்கின. இதனால் என்ன ஆச்சு என நீங்கள் கேட்பது எனக்கே கேட்கிறது, ஐந்து நிமிடம் கூகுள் வேலை செய்யாததால் உலகளாவிய இணையப் பயன்பாட்டில் 40% வீழ்ச்சி ஏற்பட்டது. கூகுளை நாம் எவ்வளவு தூரம் சார்ந்திருக்கிறோம் என்பதற்கு இதைவிட எது சரியான உதாரணமாக இருந்துவிட முடியும்…

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.