பாலஸ்தீனத்தில் சிக்கி தவிக்கும் நண்பர்கள் : சோனம் கபூர் கவலை

இஸ்ரேல் – பாலஸ்தீனிய போருக்கு உலகம் முழுக்க கடும் கண்டனம் எழுந்துள்ளது. பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு சிலரும், இஸ்ரேலுக்கு பலரும் ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் பாலிவுட் நடிகை சோனம் கபூர் போரில் அப்பாவி மக்கள் செத்து மடிவது குறித்து தனது கவலையை பதிவு செய்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது : வன்முறையும், மரணமும் எதையும் கொண்டு வந்து தரப்போவதில்லை. அது நம்மிடையே உள்ள மனித நேயத்தைத்தான் அழிக்கும். மகாத்மா காந்தி வலிமையின் ஆயுதமாக அகிம்சையை போதித்தார். அகிம்சையும் உண்மையும் ஒன்றோடு ஒன்று கலந்தவை. நமது வார்த்தையிலும், எண்ணத்திலும், செயலிலும் எப்போதுமே அகிம்சையை கடைபிடிக்க முடியாதுதான். ஆனாலும் அகிம்சையை குறிக்கோளாக வைத்துக் கொண்டுதான் நாம் வாழ்க்கையை முன்னெடுக்க வேண்டும்.

இந்த போர் காரணமாக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பாலஸ்தீனத்தில் உள்ள எனது நண்பர்களும் இதில் சிக்கி தவிப்பது இன்னும் வேதனையை அளிக்கிறது. இந்த போர் பிரச்னை விரைவாக முடிவுக்கு வரவேண்டும். என்று தனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.