வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: இஸ்ரேல் – ஹமாஸ் போர் இதுவரை இல்லாத அளவுக்கு நடந்து வரும் சூழலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாளை (அக்.,18) இஸ்ரேல் செல்கிறார். ”மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்யவும், தலைவர்களை சந்திக்க செல்கிறேன்” என ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
மேற்கு ஆசிய நாடான இஸ்ரேல் – ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. ஹமாஸ் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள காசா பகுதியில் தரைவழி தாக்குதல் நடத்துவதற்கு இஸ்ரேல் தயாராகி வருகிறது. இஸ்ரேல் தாக்குதலால் காசாவில் உள்ள 23 லட்சம் மக்கள் மின்சாரம், சுகாதார வசதிகள், தண்ணீர், போதிய உணவின்றி தவிக்கின்றனர்.
எச்சரிக்கை
”இஸ்ரேலில் கொடூர தாக்குதல்களை நடத்திய ஹமாஸ் பயங்கரவாதிகள் முற்றிலுமாக அழிக்கப்பட வேண்டும். அதேநேரம் பாலஸ்தீன மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட கூடாது.காசா பகுதியை இஸ்ரேல் ஆக்கிரமிக்க கூடாது” என எச்சரிக்கை விடுத்திருந்ததைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாளை(அக்.,18) இஸ்ரேல் செல்லவிருக்கிறார்.
இதனை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளின்கன் உறுதிப்படுத்தியுள்ளார். இஸ்ரேல் பயணத்துக்காக ஏற்கனவே திட்டமிட்டிருந்த கொலராடோ பயணத்தை பைடன் ஒத்திவைத்துள்ளார்.
பேச்சுவார்த்தை
இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியிருப்பதாவது: ஹமாஸ் போர் தாக்குதலை எதிர்கொண்டு ஒற்றுமையை வலியுறுத்த நாளை இஸ்ரேலுக்கு செல்கிறேன்.
மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்யவும், தலைவர்களை சந்திக்கவும் ஜோர்டானுக்கும் செல்கிறேன். எகிப்து – காசா இடையேயான ரபா பகுதியை மீண்டும் திறப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இவ்வாறு ஜோ பைடன் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement