பணஜி, கோவாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில், ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபி நகரில் இருந்து வந்த மூன்று பயணியரிடம் இருந்து, தங்கம் மற்றும் விலை உயர்ந்த மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
உத்தர பிரதேசத்தை சேர்ந்த இர்பான், 30; மஹாராஷ்டிராவை சேர்ந்த கம்ரான் அகமது, 38; குஜராத்தை சேர்ந்த முகமது இர்பான் குலாம், 37, ஆகியோர், மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின்அபுதாபியில் இருந்து, சமீபத்தில் கோவாவில் உள்ள மனோகர் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தனர்.
அவர்களை வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது, 5.7 கிலோ தங்கம், 3.92 கோடி ரூபாய் மதிப்புள்ள, ‘ஆப்பிள்’ நிறுவனத்தின், 28 உயர் ரக ஐ – போன்கள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக மூன்று பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த மூன்று பேரும், கடந்த 12ம் தேதி மும்பையில் இருந்து அபுதாபிக்கு சென்று, அங்கிருந்து தங்கம் மற்றும் மொபைல் போன்களை கோவாவுக்கு கடத்தி வந்தது, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement