Apologise To Her Personally: Abdul Razzaq On Controversial Aishwarya Rai Comment | ஐஸ்வர்யா ராய் குறித்து சர்ச்சை கருத்து: மன்னிப்பு கேட்ட பாக்., முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

கராச்சி: ‛‛ நடிகை ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்து கொண்டு ஒழுக்கம் உள்ள குழந்தையை பெறுவேன் என்று நீங்கள் நம்பினால் அது ஒரு போதும் நடக்காது” என சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததற்கு பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக் மன்னிப்பு கோரி உள்ளார்.

பாகிஸ்தானில், நேற்று (நவ.,14) டிவி நிகழ்ச்சி ஒன்றில் அப்துல் ரசாக் பேசும் போது, ‛‛பாகிஸ்தான் அணிக்கு தற்போது ஒரு மன எழுச்சி தேவை. அந்த காலங்களில் யூனிஸ் கான் ஒரு கேப்டனாக நல்ல எண்ணம் கொண்டு இருந்தார். அது எனக்கு சிறப்பாக செயல்பட நம்பிக்கையை அளித்தது.

உண்மையில், பாகிஸ்தானில் வீரர்களை உருவாக்கி மெருகூட்ட வேண்டும் என்ற நல்ல எண்ணம் எங்களுக்கு இல்லை. நான் ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்து கொண்டு நல்ல குணமும், ஒழுக்கமும் கொண்ட குழந்தையைப் பெறுவேன் என்று நீங்கள் நம்பினால் அது ஒரு போதும் நடக்காது.” என்றார். இதனை கேட்டு அருகில் இருந்த வீரர்கள் உமர் குல் உள்ளிட்டோர் சிரித்தனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவியது. பலரும் அப்துல் ரசாக்கிற்கு கடும் கண்டனம் தெரிவிக்க துவங்கினர்.

இதனையடுத்து, தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டு அப்துல் ரசாக் கூறியதாவது:

‛‛ நேற்று நாங்கள் கிரிக்கெட் பயிற்சி மற்றும் வியூகங்களைப் பற்றி விவாதித்தோம். அப்போது ஐஸ்வர்யா ராயின் பெயரை தவறுதலாக நான் வாய் தவறி குறிப்பிட்டு விட்டேன். நான் அவரிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்கிறேன். யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை”. இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.