ஐ சி சி தடையை நீக்குதல் மற்றும் கிரிக்கெட் போட்டிகளை இழத்தல் குறித்து கலந்தாலோசித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம் அமைச்சர்கள் உப குழுவுக்கு

  • ஜனாதிபதி அமைச்சரவையில் தீர்மானிப்பு.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) தற்போது விதித்துள்ள தடையை நீக்குவது தொடர்பான நடவடிக்கைகளை வழிநடத்துவதற்கும், இலங்கை எந்தவொரு கிரிக்கட் போட்டித்தொடரையும் இழக்க நேரிடும் அபாயம் இருப்பின் அது குறித்து கலந்துரையாடி உடனடியாக முடிவுகளை எடுப்பதற்கும் , கிரிக்கெட் தொடர்பில் நியமிக்கப்பட்டிருக்கும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான அமைச்சரவை உப குழுவுக்கு அதிகாரம்வழங்க, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (13) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானித்தார்.

மேலும், இனிமேல் இடைக்கால குழுக்களை நியமிப்பதாயின், அதற்கு அமைச்சரவையின் அனுமதி அவசியமாகும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.