World Cup Cricket 2023, WC2023:PM Modi congratulates Virat Kohli | விராட் கோஹ்லிக்கு மோடி, ஸ்டாலின் மற்றும் தலைவர்கள் வாழ்த்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: 50 சதங்கள் அடித்த விராட் கோஹ்லிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான இன்றைய முதல் அரையிறுதியில் விராட் கோஹ்லி 117 ரன்கள் எடுத்ததுடன் 50 சதங்கள் அடித்து சச்சினின் சாதனையை முறியடித்தார்.

பிரதமர் மோடி: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

கோஹ்லி தனது 50வது ஒருநாள் சதத்தை மட்டும் அடிக்கவில்லை;, சிறந்த விளையாட்டுத் திறனுக்கான வரையறை மற்றும் விடாமுயற்சிக்கு எடுத்துக் காட்டாகி இருக்கிறார். என தெரிவித்து உள்ளார்.

50 சதங்கள் அடித்த விராட் கோஹ்லிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

அன்புமணி ராமதாஸ்

சச்சின் சாதனையை முறியடித்துபுதிய சாதனை படைத்துள்ள விராட் கோஹ்லிக்கு வாழ்த்துக்கள் என பா.ம.க., அன்புமணி ராமதாஸ் வாழத்து தெரிவித்து உள்ளார்.

தே.மு.தி.க.,தலைவர் விஜயகாந்த்

இது
ஒட்டுமொத்த இந்தியர்களும் பெருமை கொள்ளும் தருணம் ஆகும். விராட் ஹோக்லி
மேலும் மேலும் பல சாதனைகளை படைத்து இந்திய நாட்டிற்கு பெருமை சேர்க்க
வேண்டும் என வாழ்த்தி உள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.