திருவண்ணாமலை: கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று காலை கொடியேற்றப்பட்டது. இதில் பல்லாயிர கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பஞ்ச பூதங்களில் அக்னி ஸ்தலமாக திகழும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீப திருவிழா உலகப்புகழ் பெற்றது. இந்த தீப விழாவை காண உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை வந்து சிவனின் ஆசிர்வாதம் பெற்று செல்வர். இதுமட்டுமின்றி, ஒவ்வொரு மாதம் பவுர்மணமி அன்று அருணாச்சலேஸ்வரர் கோயில் பின்புறம் […]