Kerala Nurses Appeal Against Death Penalty Dismissed By Yemen Court | ஏமனில் கேரள நர்சுக்கு மரண தண்டனை உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சனா: ஏமனில், கேரளாவைச் சேர்ந்த நர்சுக்கு, கொலை வழக்கு ஓன்றில் விதிக்கப்பட்ட மரண தண்டனையை அந்நாட்டு உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதனையடுத்து, அவரை மீட்க ஏமன் செல்ல அனுமதி கேட்டு அவரது தாயார் விடுத்த கோரிக்கை தொடர்பாக ஒரு வாரத்தில் முடிவு எடுக்கும்படி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

கேரளாவைச் சேர்ந்த நிமிஷா பிரியா மற்றும் அவரது குடும்பத்தினர் பல ஆண்டுகளாக ஏமன் நாட்டில் வசித்து பணியாற்றி வந்தனர். அவரது கணவர் மற்றும் மகள் இந்தியாவிற்கு திரும்பினார். ஆனால், வேலை காரணமாக நிமிஷா பிரியா மட்டும் ஏமனில் தங்கி இருந்து , தலால் மெஹதி என்பவருடன் இணைந்து கிளினிக் ஒன்றை துவங்கி உள்ளார். இதனால், நிமிஷா பிரியாவின் பாஸ்போர்ட்டை தலால் மெஹதி வாங்கி வைத்துள்ளார். நிமிஷா பிரியா கேட்ட போது பாஸ்போர்ட்டை அவர் வழங்க மறுத்துள்ளார்.

இதனால், பாஸ்போர்ட்டை வாங்குவதற்காக கடந்த 2017 ல் தலால் மெஹதிக்கு மயக்க மருந்தை நிமிஷா பிரியா செலுத்தி உள்ளார். ஆனால், எதிர்பாராத விதமாக அவர் உயிரிழந்தார். இதனையடுத்து நிமிஷா பிரியாவை போலீசார் கைது செய்தனர். அவருக்கு ஏமன் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதனையடுத்து 6 வருடமாக அவர் சிறையில் இருந்து வருகிறார். நிமிஷா பிரியா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்து, மரண தண்டனையை ஏமன் நாட்டு உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது.

இந்நிலையில், மகளை மீட்பதற்காக நிமிஷா பிரியாவின் தாயார் ஏமன் செல்ல திட்டமிட்டார். ஆனால், 2017 முதல் ஏமன் செல்வதற்கு இந்தியர்களுக்கு , மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதனால், தனக்கு அனுமதி வழங்கும்படி டில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த டில்லி உயர்நீதிமன்றம், இந்த விவகாரத்தில் ஒரு வாரத்தில் முடிவு எடுக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது.

இந்த வழக்கு விசாரணையின் போது, சமீபத்தில் வெளியிடப்பட்ட விதிமுறைகளின்படி, குறிப்பிட்ட காரணத்திற்காக, குறைந்த நாட்கள் ஏமன் செல்ல அனுமதி வழங்கி மறு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டதால், ஏமன் அதிபரால் மட்டுமே மரண தண்டனையை ரத்து செய்ய முடியும் என்றார்.

நிமிஷா பிரியா தாயார் தரப்பு வழக்கறிஞர் வாதாடும் போது, மரண தண்டனையை உறுதி செய்தது எதிர்பாராதது. ஆனால், ஏமன் நாட்டு சட்டத்தின்படி உயிரிழந்தவர் குடும்பத்தினர், குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இருந்து இழப்பீடு ஏற்றுக் கொண்டால் தண்டனையில் இருந்து விலக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.