வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ராம்பூர்: 2019-ம் ஆண்டு தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறியதாக தொடரப்பட்ட வழக்கில் நேரில் ஆஜராக நடிகை ஜெயபிரதாவிற்கு கீழ் கோர்ட் ஜாமினில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை ஜெயபிரதா 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் ராம்பூர் லோக்சபா தொகுதி பா.ஜ., வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரசாரத்தை துவக்கினார். அப்போது தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறி ராம்பூரில் பேரணி நடத்தியதாக சவார் போலீஸ் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டு, சிறப்பு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்தது.
நேரில் ஆஜராகுமாறு நான்கு முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை. இன்று நடந்த வழக்கினை விசாரித்த நீதிபதி ஷோபித் பன்சால், ஜெயபிரதாவிற்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து, வழக்கு விசாரணையை நவ. 24-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement