தங்கவயல், : இளைஞர்கள், மாணவர்களை சீரழிக்கும் போதைப் பொருளை ஒழிக்க மருந்துக் கடைகளும் ஒத்துழைக்க வேண்டும் என, தங்கவயல் போலீசார் எச்சரித்துள்ளனர்.
தங்கவயல் போலீஸ் மாவட்டத்தில் ஒன்பது போலீஸ் நிலையங்கள் உள்ளன. இவற்றில் போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, சிறப்பு போலீஸ் அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
குழுவில், காமசமுத்ரா இன்ஸ்பெக்டர் நாராயணசாமி, எஸ்.ஐ.,கள் பூதிக்கோட்டை- சுனில் ஐரோதகி, கேசம்பள்ளி- சியாமளா, ஆண்டர்சன்பேட்டை -மஞ்சுநாத், உரிகம் குருராஜ் சிந்தக்கல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இக்குழுவினர், மருந்து கடைகளுக்குச் சென்று, போதை தடுப்பு குறித்து அறிவுறுத்தினர்.
போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
தங்கவயல் போலீஸ் மாவட்டத்திற்கு உட்பட்ட மருந்து கடைகளில் டாக்டர்கள் பரிந்துரை இல்லாமல் மருந்துகள் வழங்க கூடாது. இளைஞர்கள், மாணவர்கள் போதை தரும் மருந்துகளை, மருந்து கடைகளில் வாங்குவதாக தகவல்கள் வந்துள்ளன. அவ்வாறு விற்பனை செய்வது சட்டப்படி தவறு.
இளைஞர்கள், மாணவர்களை சீரழிக்கும் போதைப் பொருளை பயன்படுத்துவதை தடுக்க மருந்து கடைகளும் ஒத்துழைக்க வேண்டும்.
சட்டவிரோதமாக மருந்து கடைகள் ஈடுபட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement