சென்னை: Vivek Birthday (விவேக் பிறந்தநாள்) சின்னக்கலைவாணர் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் விவேக்கின் 62ஆவது பிறந்தநாள் இன்று. விவேக் தமிழ் சினிமாவில் தவிர்க்கவே முடியாத நகைச்சுவை நடிகர். டிகிரி முடித்துவிட்டு அரசாங்க வேலை பார்த்துக்கொண்டிருந்தவருக்கு சினிமா மீது எப்போதும் தீராத ஆர்வம் இருந்தது. அதன் காரணமாக ஒருபக்கம் வேலையை பார்த்துக்கொண்டு மறுபக்கம் சினிமா வாய்ப்பையும் விடாமல் தேடிக்கொண்டிருந்தார்.
