வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சண்டிகர்: ஹரியானாவில், ஆசிரம பெண்கள் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைதாகி சிறையில் உள்ள தேரா சச்சா சவுதா’ அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு மீண்டும் 21 நாள் பரோல் வழங்கியது கோர்ட்.
ஹரியானாவில், ‘தேரா சச்சா சவுதா’ அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங், இரு கொலை வழக்குகளில் ஆயுள் மற்றும் பாலியல் பலாத்கார வழக்கில் 2017-ம் ஆண்டு 20 ஆண்டு சிறை தண்டனை பெற்று ரோஹ்தக் சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்தாண்டு பிப்ரவரி 21 நாள், அக்டோபரில் மீண்டும் 40 நாள் பரோல், தொடர்ந்து இந்தாண்டு ஜனவரியில் 40 நாள் பரோல் ஜூலை மாதம் 40 நாள் என பலமுறை பரோலில் வெளியே வந்தார்.
இந்நிலையில் மீண்டும் பரோல் கேட்டு விண்ணத்திருந்த நிலையில் அவருக்கு 21 நாள் பரோல் வழங்கி கோர்ட் உத்தரவிட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement