சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த், சென்னை – மியாட் மருத்துவமனையில் உடல்நல பாதிப்பால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் வீடு திரும்புவார் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அண்ணன் விஜயகாந்த் நலம் பெறப் பிரார்த்திக்கும் கோடி இதயங்களில் நானும் ஒருவன் என நடிகர் சூரயார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது. “அண்ணன் விஜயகாந்த் அவர்கள் நலம் பெறப் பிரார்த்திக்கும் கோடான கோடி இதயங்களில் நானும் ஒருவனாகப் பங்கேற்கிறேன். கோடானகோடி மனிதர்களின் வேண்டுதல்கள் நிச்சயம் பலிக்கும்.! அவரை பூரண குணமாக்கி, நலம் பெற வைக்கும்.!!” என எக்ஸ் தளத்தில் சூர்யா ட்வீட் செய்துள்ளார்.
விஜயகாந்த், கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால், அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை. இந்நிலையில், காய்ச்சல் காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் கடந்த நவம்பர் 18-ம் தேதி விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
அண்ணன் விஜயகாந்த் அவர்கள் நலம் பெறப் பிரார்த்திக்கும் கோடான கோடி இதயங்களில் நானும் ஒருவனாகப் பங்கேற்கிறேன்.!
கோடானகோடி மனிதர்களின் வேண்டுதல்கள் நிச்சயம் பலிக்கும்.! அவரை பூரண குணமாக்கி, நலம் பெற வைக்கும்.!!
— Suriya Sivakumar (@Suriya_offl) December 3, 2023