பெங்களூரு : தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஏழாம் ஆண்டு நினைவு அஞ்சலி, பெங்களூரு, தங்கவயல், பங்கார்பேட்டையில் அனுஷ்டிக்கப்பட்டது.
பெங்களூரு: ஸ்ரீராமபுரம் ஐந்தாவது பிரதான சாலையில், கர்நாடக மாநில எம்.ஜி.ஆர்., மன்ற முன்னாள் இணை செயலர் பழனி தலைமையில் ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து, கற்பூரம் ஏற்பட்டது. கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
* பெங்களூரு – மைசூரு சாலையில் உள்ள ஆனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில், மாநில முன்னாள் துணை செயலர் தெய்வசகாயம் தலைமையில், அ.தி.மு.க.,வினர், ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்தனர்.
தங்கவயல்: சாம்பியன் ஹைகிரவுண்ட் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில், மாநில அ.தி.மு.க., செயலர் எஸ்.டி.குமார் தலைமையில் பெண்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டன. அன்னதானம் வழங்கினர்.
அன்பரசன், வேடியப்பன், சந்திரிகா, மல்லிகா, பொன் சந்திரசேகர் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை மாவட்ட இணைச் செயலர் உஷா ரஞ்சித் குமார் செய்திருந்தார்.
அண்ணா தொழிற்சங்கம் பேரவை: தங்கவயல் கோரமண்டல் ஓரியண்டல் வட்டத்தில் உள்ள அண்ணா தொழிற்சங்கப்பேரவை அலுவலகத்தில், அதன் மாநில செயலர் அன்பு தலைமையில் நிகழ்ச்சி நடந்தது. ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் துாவியும் அஞ்சலி செலுத்தினர்.
ஏழைகளுக்கு வேட்டி, சேலைகள், அரிசி, உணவுப் பொருட்கள் வழங்கினர். அசோக் குமார், இயேசு, பார்த்திபன், சவுந்தர்ராஜ், சம்பத், அஜந்தா பிரியா, நிர்மலா உட்பட பலர் பங்கேற்றனர்.
பங்கார் பேட்டை: அம்பேத்கர் சதுக்கத்தில் உள்ள அ.தி.மு.க., அலுவலகத்தில், அமீர் ஜான் தலைமையில் ரங்கசாமி முன்னிலையில் ஜெயலலிதாவின் படத்திற்கு பூஜை செய்தனர்.
அன்னதானம் வழங்கப்பட்டது. தங்கவயல் ஆல்பர்ட், ஆனந்த், சாயின்ஷா, ஜெகதீஷ், பயரோஸ், சோட்டு உட்பட பலர் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்