பிரயாக்ராஜ்:உத்தர பிரதேசத்தில், பல்கலை விடுதியில் வெடிகுண்டு தயாரித்த மாணவர், குண்டு வெடித்து காயம் அடைந்தார்.
உ.பி., மாநிலம் அலகாபாத் பல்கலையில் எம்.ஏ., படிக்கும் பிரபாத் யாதவ், அதே வளாகத்தில் மாணவர் விடுதியில் தங்கியிருந்தார். தன் அறையில் நேற்று முன்தினம் மாலை வெடிகுண்டு தயாரித்துள்ளார். அப்போது திடீரென அது வெடித்துச் சிதறியது.
பிரபாத் வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனிருந்த மாணவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
தகவல் அறிந்து வந்த போலீசார் இருவரையும் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்த வெடிமருந்தை பறிமுதல் செய்து, பிரபாத் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். சிகிச்சை முடிந்த வந்தவுடன், அவர் கைது செய்யப்படுவார் என போலீசார் கூறினர். இந்த சம்பவம் பல்கலை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement