கொப்பால் : அஞ்சனாத்ரி ஹனுமன் கோவில், உண்டியல் காணிக்கையாக 20.36 லட்சம் ரூபாய் வசூலாகி உள்ளது.
கொப்பால், கங்காவதி அஞ்சனாத்ரி மலையில், பிரசித்தி பெற்ற ஹனுமன் கோவில் உள்ளது. கொப்பால் மட்டுமின்றி கர்நாடகாவின் பிற மாவட்ட பக்தர்களும், அண்டை மாநிலத்தை சேர்ந்தவர்களும், கோவிலுக்கு வருகை தருகின்றனர்.
பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை, மாதம் ஒரு முறை எண்ணப்படுவது வழக்கம். கடந்த மாதம் 4ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை பக்தர்கள் செலுத்திய, உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, கங்காவதி தாசில்தார் மஞ்சுநாத் தலைமையில், கோவில் மண்டபத்தில் நேற்று நடந்தது.
கிரேடு – 2 தாசில்தார் மஹந்த் கவுடா, தாசில்தார் அலுவலக ஊழியர்கள், கோவில் நிர்வாக ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் பாதுகாப்பு, கண்காணிப்பு கேமரா பார்வையில், காணிக்கை எண்ணும் பணி மேற்கொள்ளப்பட்டது.
மொத்தம் 20 லட்சத்து 36 ஆயிரத்து, 465 ரூபாய் உண்டியல் காணிக்கையாக கிடைத்து உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement