ஜெருசலேம்: காசாவில் அச்சுறுத்தல்காரர்கள் என நினைத்து 3 பிணை கைதிகளை இஸ்ரேல் ராணுவம் கொன்று விட்டதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வருத்தம் தெரிவித்துள்ள இஸ்ரேல் ராணுவம் விசாரணை நடப்பதாகவும் கூறியுள்ளது.
ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸின் முக்கிய இடமாக கருதப்படும் ஷெஜையா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை அதிகப்படுத்தியுள்ளது. இந்த இடத்தில் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேல் ராணுவத்தினற்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது. இந்நிலையில் சண்டையின்போது, இஸ்ரேல் ராணுவ வீரர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடிய நபர்கள் எனக் தவறுதலாக கருதி மூன்று பிணைக்கைதிகளை சுட்டுக்கொன்றது.
இதற்கு வருத்தம் தெரிவித்து, இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இஸ்ரேல் ராணுவம் தவறுதலாக மூன்று பிணை கைதிகளை சுட்டுக்கொலை செய்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போரிட்டு வரும் வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனி இது போல் நடந்து விடக்கூடாது என வீரர்களுக்கு பாடம் கற்று கொடுக்கப்பட்டுள்ளது. சோகமான சம்பவத்திற்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement