கோரமங்களா : ‘பப்’பில் அறிமுகமான நபர், அவரது நண்பர்கள் தன்னை கற்பழித்து இருக்கலாம் என்று, சந்தேகம் இருப்பதாக ஐ.டி., நிறுவன பெண் ஊழியர், போலீசில் புகார் செய்து உள்ளார்.
பெங்களூரு கோரமங்களா போலீஸ் நிலையத்தில், 25 வயது இளம்பெண், நேற்று முன்தினம் அளித்த புகார்:
எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில், ஊழியராக வேலை செய்கிறேன். கடந்த 12 ம் தேதி இரவு கோரமங்களாவில் உள்ள, ‘பப்’பிற்கு சென்றேன். அங்கு மது குடித்த பின்னர், சுயநினைவை இழந்தேன். மறுநாள் அதிகாலை 3:00 மணிக்கு கண்விழித்து பார்த்த போது, ஆடுகோடி தேவகவுடா லே – அவுட்டில் ஒரு வீட்டின் முன்பு படுத்து இருந்தேன்.
நான் எப்படி அங்கு சென்றேன் என்று தெரியவில்லை. ‘பப்’ பில் வைத்து, எனக்கு ஒருவரின் அறிமுகம் கிடைத்தது. நான் சுயநினைவை இழந்ததும் என்னை, அந்த நபரும், அவரது நண்பர்களும் கூட்டாக சேர்ந்து, கற்பழித்து இருக்கலாம் என்று, சந்தேகம் உள்ளது. என் உடலில் சில இடங்களில், காயம் ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து விசாரிக்க வேண்டும்.
இவ்வாறு புகாரில்கூறி இருந்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement