உத்தரபிரதேசத மாநிலம் பாக்பத் மாவட்டத்தை சேர்ந்த அமித் சவுத்ரி என்பவர், 12 ஆண்டுகளுக்கு முன்பு கொலை வழக்கில் சிக்கினார். பின்பு தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க சட்டம் பயின்று, காவல்துறை அதிகாரி கொலை வழக்கில் தானே தனக்கு வாதாடி 12 ஆண்டுகள் கழித்து அனைத்துக் குற்றச்சாட்டுக்களிலிருந்தும் வெளியே வந்துள்ளார்.
கடந்த 2011-ம் ஆண்டு அமித் சவுத்ரி (அப்போது வயது 18) பாக்பத் மாவட்டத்தில் உள்ள தனது சகோதரியின் மாமியார் வீட்டிற்கு சென்றிருந்த போது ஏற்பட்ட தகராறில், பணியில் இருந்த இரண்டு காவலர்கள் தாக்கப்பட்டனர். அதில் ஒரு காவலர் உயிரிழந்தார், மற்றொருவர் காயமடைந்தார். இந்த சம்பவத்தில் இவரோடு சேர்த்து மொத்தம் 17 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அமித் சவுத்ரி பட்டப்படிப்பை படித்துகொண்டு இருந்த வேளையில் கொலை வழக்கில் சிக்கியதால், அவரது பட்டப்படிப்பு பாதிக்கப்பட்டது. இவர் மீது போடப்பட்ட வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்து பின்னர் ஜாமீனில் விடுதலையாகி தன் பட்டப்படிப்பை தொடர்ந்துள்ளார்.
பின்பு அவர் இந்த வழக்கில் இருந்து விடுதலையாக வேண்டும் என நினைத்து எல்.எல்.எம் முதுநிலை சட்டம் பயில்கின்றார். அதன்பிறகு தன் மீது போடப்பட்ட வழக்கை விரிவான விசாரணை செய்து, மீண்டும் சாட்சியங்களையும், தடயங்களையும் பரிசோதித்ததில் காவலர் கொலைவழக்கில் அமித் சவுத்ரி குற்றவாளி இல்லை என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதோடு அவர் மீது போடப்பட்டிருந்த அத்தனை வழக்கையும் நீக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
பின்னர் முழுமையாக அந்த வழக்கில் இருந்து விடுதலையான அமித் சவுத்ரி பொய் வழக்கில் என்னோடு சேர்த்து குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கி சிறையிலடைக்ப்பட்ட 11 பேருக்கும் தான் உதவ விரும்புவதாகவும், அதோடு அவர்களுக்கு இலவச சட்ட உதவிகளையும் வழங்கி அவர்களையும் இந்த வழக்கில் இருந்து விடுதலை பெறச்செய்வதே என் தலையாய நோக்கம் என தெரிவித்துள்ளார்.

2011-ம் ஆண்டு தன் மீது போடப்பட்ட பொய் வழக்கில், தனக்கு விதிக்கப்பட்ட 12 ஆண்டுகள் சிறை தண்டனை தீர்ப்பை, இருந்து விடுதலை பெறுவதற்காகவே சட்டம் பயின்று தான் நிரபராதி என நிரூபித்து, , தனக்காகவே அந்த வழக்கில் வாதாடி பின்னர் தான் குற்றமற்றவர் என நிரூபித்த அமித் சவுத்ரியின் செயல் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.