சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் எஸ்கே 21 படத்தின் சூட்டிங் காஷ்மீர், சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடந்துள்ளது. மாவீரன் படத்தின் சூப்பர் ஹிட்டை தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் இந்தப் படத்தில் நடித்து வருகிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத் தயாரிப்பாக உருவாகிவரும் இந்தப் படத்தின் சூட்டிங் காஷ்மீரில் மட்டும் ஏறக்குறைய 3 மாதங்கள் எடுக்கப்பட்டன.
