வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஹூசாவிக்: சந்திரயான் -3 திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய இஸ்ரோவுக்கு, ஐஸ்லாந்து நாட்டின் உயரிய விருதான ‛ லீப் எரிக்சன் லூனார் ‘ விருது வழங்கப்பட்டு உள்ளது.
நிலவின் தென் பகுதியில் ஆய்வு செய்வதில் வல்லரசு நாடுகள் இடையே கடும் போட்டி நிலவியது. ஆனால், ‛சந்திரயான் 3′ திட்டம் மூலம் இந்தியா அந்த சாதனையை படைத்தது. இஸ்ரோ அனுப்பிய ‛சந்திரயான்-3′ விண்கலத்தின் விக்ரம் லேண்டர் ஆக.,23ம் தேதி நிலவின் தென் பகுதியில் தரையிறங்கி இந்திய மக்கள் அனைவரையும் பெருமையடைய செய்தது. இந்த சாதனைக்கு பிறகு, உலகின் முன்னணி நாடுகள் இஸ்ரோ உடன் இணைந்து செயல்பட முன்வந்துள்ளன.
இந்நிலையில், இஸ்ரோவுக்கு ஐஸ்லாந்து நாடு உயரிய பரிசை வழங்கி கவுரவித்துள்ளது. அந்நாட்டின் ஹூசாவிக் நகர ஆய்வு அருங்காட்சியகம், இஸ்ரோவுக்கு ‛ 2023 – லீப் எரிக்சன் லூனார்’ என்ற உயரிய விருதை வழங்கி உள்ளது. இதனை, இஸ்ரோ சார்பில் ஐஸ்லாந்துக்கான இந்திய தூதர் பி.ஷியாம் பெற்றுக்கொண்டார். இந்த விருதை வழங்கியதற்காக, இஸ்ரோ தலைவர் சோம்நாத் நன்றி தெரிவித்து செய்தி அனுப்பி உள்ளார்.
இந்த விருதை ஹூசாவிக் நகர அருங்காட்சியகம் கடந்த 2015ம் ஆண்டு முதல் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement