கேப்டன் விஜயகாந்துக்கு கனடா தமிழ் சங்கம் அஞ்சலி

நடிகரும், தேமுதிக., தலைவருமான விஜயகாந்த் கடந்த டிச., 28ல் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர். கடந்த டிசம்பர் 29, 2023 மாலை 7 மணிக்கு கனடா தமிழர்கள் விஜயகாந்த் அவர்களுக்கு டொரொண்டோவில் அஞ்சலி செலுத்தினர். கனடா தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர் வள்ளிக்கண்ணன் மருதப்பன் அஞ்சலி உரையின் போது கேப்டன் விஜயகாந்த்தின் சிறந்த நடிகர், அரசியல் தலைவர், பாசமான நண்பர் என்றும் அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது என்று குறிப்பிட்டார்.

படைப்பாளிகளின் உலகம் ஆசிரியர் நந்தன் கதிர்காமநாதன் விஜயகாந்த்திற்கு அஞ்சலி கவிதை பாடினார். இந்த அஞ்சலி கூட்டத்தில் எஸ்டேட் மண்டப உரிமையாளர் ராஜா, சமூகம் ஊடக நண்பர் கிருபா, செய்தி.காம் ஊடக நண்பர் குணா, பட்டிமன்ற பேச்சாளர்கள் ராஜா சுப்பிரமணி, சிறுமி.ஹரிணி வள்ளிக்கண்ணன் ஆகியோர் விஜயகாந்த்திற்கு அஞ்சலி செலுத்தி பேசினார்கள். ஊடக நண்பர்கள், சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.