ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை, காலிப் பணியிடங்களை நிரப்புதல், பழைய ஓய்வூதியத் திட்டம், 15வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்வது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று 2வது நாளாக வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. போக்குவரத்து தொழிலாளர்களின் இந்த போராட்டம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரசுப் பேருந்து போக்குவரத்து பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் பேருந்து போக்குவரத்து பாதிக்கப்படாத வகையில் தொ.மு.ச. சங்க பணியாளர்களைக் கொண்டு இயக்கப்பட்டு […]
