வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஒட்டாவா: கனடாவில் விமானம் கிளம்பும் நேரத்தில் கதவை திறந்து பயணி கீழே குதித்த சம்பவம் சக பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கனடாவின் ஆன்டாரியோ நகரில் உள்ள பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு ‛ ஏர் கனடா’விற்கு சொந்தமான விமானம் ஒன்று கிளம்பியது. விமானம் கிளம்பும் நேரத்தில், அமைதியாக அமர்ந்திருந்த பயணி ஒருவர் திடீரென யாரும் எதிர்பாராத வகையில், விமானத்தின் கதவை திறந்து 20 அடி உயரத்தில் இருந்து குதித்தார். இது சக பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விமான ஊழியர்கள் உடனடியாக கீழே வந்து அந்த பயணியை பரிசோதித்தனர். அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் அவசர உதவி பிரிவினர் வரவழைக்கப்பட்டனர். இதனால், விமானம் 6 மணி நேரம் தாமதமாக கிளம்பி சென்றது. சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement