வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: அடுத்த கல்வி ஆண்டு (2024-25) முதல் 2 ஆண்டு பி.எட் படிப்புக்கு புதிய அனுமதிகளை கல்வி நிறுவனங்களுக்கு வழங்க வேண்டாம் என்றும், 4 ஆண்டு பி.எட் திட்டத்தை நடத்த விரும்பும் கல்வி நிறுவனங்கள் ஆன்லைனில் புதிதாக விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இளநிலைப் பட்டப் படிப்புக்கு 3 ஆண்டுகள், பி.எட். படிப்புக்கு 2 ஆண்டுகள் என 5 ஆண்டுகள் ஆகின்றன. இதற்கு மாற்றாக புதிய கல்விக் கொள்கையின் கீழ் 4 ஆண்டுகளில் இளநிலைப் பட்டப் படிப்பு, பி.எட். படிப்புடன் கூடிய ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்டத்தை (ஐடிஇபி) மத்திய கல்வித்துறை அமைச்சகம் அறிமுகம் செய்தது. இந்த படிப்பில் சேர தேசிய தேர்வு முகமை நடத்தும் தேசிய பொது நுழைவு தேர்வை எழுத வேண்டும்.
அதேநேரத்தில் இன்னும் சில கல்வி நிறுவனங்கள் 2 ஆண்டு பி.எட் படிப்பை தொடர்ந்து வந்தன. இந்த நிலையில் அடுத்த கல்வி ஆண்டு (2024-25) முதல் 2 ஆண்டு பி.எட் படிப்புக்கு புதிய அனுமதிகளை கல்வி நிறுவனங்களுக்கு வழங்க வேண்டாம் என்றும், 4 ஆண்டு பி.எட் திட்டத்தை நடத்த விரும்பும் கல்வி நிறுவனங்கள் ஆன்லைனில் புதிதாக விண்ணப்பிக்கலாம் என்றும் இந்திய மறுவாழ்வு கவுன்சில் (ஆர்.சி.ஐ) அறிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement