சென்னை: நாடாளுமன்ற தேர்தல் இந்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 22ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் நடப்பாண்டு ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக மின்னணு இயந்திரங்களை சரிபார்த்தல், வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்தல், வாக்குச்சாவடிகளை தயார் செய்தல் ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், மாநில தேர்தல் ஆணையர்கள் கூட்டத்தை டெல்லியில் கூட்டியுள்ளது. […]
