மலர் தொடரிலிருந்து வெளியேறிய ஹீரோ

தனியார் டிவியில் மதிய நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் தொடர் மலர். இதில் ஹீரோவாக அக்னியும், ஹீரோயினாக ப்ரீத்தி ஷர்மாவும் நடித்து வருகின்றனர். இருவருக்குமிடையே இருக்கும் ஹூயூமரும் கெமிஸ்ட்ரியும் க்யூட்டாக இருப்பதால் இந்த ஜோடிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது மலர் தொடர் 250 எபிசோடுகளை கடந்துள்ள நிலையில் ஹீரோவாக நடித்து வரும் அக்னி தவிர்க்க முடியாத காரணத்தால் சீரியலிலிருந்து விலகியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், ‛‛எனக்கு எதிர்பாரதவிதமாக காயம் ஏற்பட்டுள்ளது. இந்த காயம் குணமடைய நீண்ட நாள் ஆகும் என்பதால் சீரியல் தடங்கல் இல்லாமல் ஒளிபரப்பாக சீரியலை விட்டு விலகுகிறேன். இது அனைவரும் சேர்ந்து எடுத்த முடிவு. ஆதரவு அளித்த அன்புக்குரிய நேயர்கள் அனைவருக்கும் நன்றி. எனக்கு பதிலாக அர்ஜுனாக நடிக்க இருக்கும் நடிகருக்கும் உங்கள் ஆதரவை கொடுங்கள்'' என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.