புதுடெல்லி: மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவரம்:
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 609 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 3,368 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கர்நாடகாவில் ஒருவர், கேரளாவில் இருவர், மேற்கு வங்கத்தில் மூவர் என 6 பேர் உயிரிழந்தனர். இதனால் நாட்டின் மொத்த உயிரிழப்பு 5,33,412 ஆக அதிகரித்துள்ளது.
கரோனா தொற்றிலிருந்து இதுவரை 4,44,84,162 பேர் குணம் அடைந்துள்ளனர். குணடைந்தோர் விகிதம் 98.81 சதவீதமாக உள்ளது. உயிரிழப்பு விகிதம் 1.19 சதவீதமாக உள்ளது. நாடு தழுவிய தடுப்பூசி பணியில் இதுவரை 220.67 கோடி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.