இராக் மீது தாக்குதல்: குறி வைக்கப்பட்ட மொசாட் உளவுத்துறை தலைமையகம்; அமெரிக்கா கண்டனம்!

மத்திய கிழக்கு நாடுகளில் போர் சூழல் பரவும் நிலை தொடர்ந்து உருவாகிவருவது, உலக நாடுகளுக்கு மத்தியில் அச்சத்தை அதிகரித்திருக்கிறது. ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கி, இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் வரை பல்லாயிரக் கணக்கான மக்கள் பலியான நிலையில், இன்றளவும் போர் தொடந்து வருகிறது. இதற்கிடையில், சோமாலியா கடல் கொள்ளையர்களைக் கட்டுப்படுத்துவதாக ஏமன் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதும் ஐ.நா வரை பேசப்பட்டது.

இந்த நிலையில்தான், இராக்கின் மீது இரான் தக்குதல் நடத்திய சம்பவம் விவாதப் பொருளாகியிருக்கிறது. இராக் குர்திஸ்தானின் தலைநகரான அர்பிலில் இயங்கும் தீவிரவாத குழுக்களின் இலக்குகள் மீதும், உளவுத்துறை தலைமையகத்தின் மீதும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியதாக இரான் தெரிவித்திருக்கிறது. இந்த தாக்குதலில் பிரபல தொழிலதிபர் பெஷ்ரா டிசாயீ உட்பட 4 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 6 பேர் காயமடைந்திருக்கிறார்கள்.

இந்த தாக்குதல் குறித்து இரான்,“ஜனவரி 3 அன்று, கெர்மானில் உள்ள தளபதி காசிம் சுலைமானியின் சமாதிக்கு அருகில் கூடியிருந்த மக்கள் மீது, இராக்கின் தீவிரவாதக் குழு நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் சுமார் 90 பேர் கொல்லப்பட்டனர். கடந்த டிசம்பர் மாதம் , ராஸ்கில் உள்ள ஒரு காவல் நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 11 இரானிய காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல்களுக்குப் பதிலடி தரும்விதமாக, அர்பிலில் இயங்கும் தீவிரவாத குழுக்களின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

மேலும், உளவு நடவடிக்கைகளை அதிகரித்து நாட்டில் பயங்கரவாத நடவடிக்கைகளைத் திட்டமிடுவதற்கு மையமாகச் செயல்பட்டுவருவதால், இராக்கின் குர்திஸ்தான் பகுதியில் உள்ள இஸ்ரேலிய உளவுப் பிரிவான ‘மொசாட் உளவு அமைப்பு’ தலைமையகம் தாக்கப்பட்டது.” எனத் தெரிவித்திருக்கிறது.

இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்திருக்கிறது.

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர்,“இரானின் தாக்குதல்களை அமெரிக்கா வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிக்கிறது. இராக்கின் உறுதித் தன்மையைக் குலைக்கும் இந்தப் பொறுப்பற்ற ஏவுகணைத் தாக்குதல்களை அமெரிக்கா கடுமையாக எதிர்க்கிறது.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.