MGR who worked tirelessly for the welfare of the people: Prime Minister Modi praise | மக்களின் நலனுக்காக அயராது உழைத்தவர் எம்ஜிஆர்: பிரதமர் மோடி புகழாரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி : முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., மக்களின் நலனுக்காக அயராது உழைத்தவர் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: எம்ஜிஆர் பிறந்த நாளில், அவரை நினைகூர்ந்து, அவரை கொண்டாடுவோம். தமிழ் சினிமாவில் உண்மையான அடையாளமாகவும், தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவராகவும் திகழ்ந்தார்.

அவரது படத்தில் உள்ள சமூக நீதி கருத்துகள் மற்றும் சிந்தனை வெள்ளித்திரைக்கு அப்பாலும் மக்களின் மனங்களை வென்றது. தலைவராகவும், முதல்வராகவும் மக்களின் நலனுக்காக அயராது உழைத்தார். தமிழகத்தின் வளர்ச்சியில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தினார். அவரது அயராது பணி நம்மை ஊக்குவிக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.